Posts with the tag Tamil:

Dont Talk Ill Story

புறம் பேசாதீர் - படிக்கவேண்டிய கதை!

படிக்கவேண்டிய கதை! (புறம் பேசாதீர்)

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

Read More ...

Tamil Calendar Melnokku Keezhnokku Samanokku Naal

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள்

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று *போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…?

தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒருசில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம்.

அந்த வகையில் தினசரி நாள்காட்டியில் உள்ள ஒரு விஷயம்தான் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் போன்ற நாட்கள். இந்த நாட்கள் அனைத்து நாள்காட்டியிலும் இருக்கும்.

ஆனால் நாம் அதை பொதுவாக, “மேல்நோக்கு” என்றால் “நல்ல நாள்” என்றும், “சமநோக்கு” என்றால் *சுமாரான நாள்"எனவும், “கீழ்நோக்கு நாள்” என்றால் “கெடுதலான” நாளாகவும் எண்ணி அந்த நாட்களில் தவறானகாரியங்களில் ஈடுபடுகிறோம்.

Read More ...

Gayathri Mantram Speciality

காயத்ரி_மந்திரம்

காயத்ரி மந்திரம் எல்லா மந்திரங்களிலும் மிகச் சிறந்த மந்திரம் மற்றும் பெரியது ஆகும். இது அனைத்து வேத மந்திரங்களின் சக்தி மற்றும் ஆற்றலைத் தன்னுள் கொண்டுள்ளது. இது மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியை அளிக்கிறது.

Read More ...

Sri SivaPerumaan Pattabhishegam

ஸ்ரீசிவ பெருமானின் பட்டாபிஷேக திருக்கோலம்

எல்லோரும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்தை பார்த்திருப்போம்*ஆனால் ஸ்ரீ சிவ பெருமானின் பட்டாபிஷேகம் படத்தை  அனேகம் பேர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.

சிவபெருமான் தன்னுடைய திருவிளையாடல்கள் அனைத்தையும் நிகழ்த்திய இடம், மதுரை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ் மிக்க தலம் மதுரை. இங்கு சிவபெருமான் தன் அடியார்களுக்கு அருள்புரிய 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். 

Read More ...

Know Your E Tamil

Know Your E Tamil

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

KNOW e-TAMIL

“ஐயா வணக்கம்."

“வணக்கம். சொல்லுங்க.”

“அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா ?”

“அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள் ?”

“நேற்று தான் ஐயா புலனம் (WhatsApp) மூலம் அனுப்பினேன். இன்று காலை பற்றியம் (Messenger) மூலமும் பகிர்ந்தேன்.”

Read More ...

Lord Muruga Shanmuga Sadatcharam Benefits

ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்

ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம் :-

  1. சரஹணபவ – என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
  2. ரஹணபவச – என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
  3. ஹணபவசர – என தொடர்ந்து ஜெபித்து வர பகை, பிணி நோய்கள் தீரும்.
Read More ...

New Year 2024 Useful Tips

புது வருடம் சிறப்பாய் இருக்க

  1. ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்

  2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு ஒரு மணி மேல் செலவழிக்காதீர்கள். அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்.

  3. ஞாயிற்று கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்.

Read More ...

Thiruvannamalai Deepam Specialities

🛕 திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தின் சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

  1. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

  2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

  3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

Read More ...

The Real Aiswaryam

“ஐஸ்வர்யம்” என்றால் பணக்கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல!

வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம்!

வீட்டிற்கு வந்தவுடன், சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்!

எவ்வளவு வளர்ந்தாலும், அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்!

Read More ...

Oormila in Ramayanama Greater Than Sita

ஆயிரம் சீதைகள் வந்தாலும் ஒரு ஊர்மிளாவுக்கு ஈடாகாது

ராமாயணத்தில் உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி யார் என்றால் லட்சுமணன மனைவி ஊர்மிளா தான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள்.

வால்மீகி, கம்பர் இருவரும் இந்தக் கதாபாத்திரத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர் என்றுதான் தோன்றுகிறது. ஜனகமகாராஜாவின் தத்து மகள் தான் சீதை. ஆனால் ஜனகரின் உண்மையான மகள் ஊர்மிளா! ஜனகரின் தம்பி குஜஸ்த்வஜாவின் மகள் மாண்டவி. இவள் பரதனை மணந்தவள். இன்னொரு மகள் ஸ்ருதகீர்த்தி.இவள் சத்ருக்கனை மணந்தவள்.

Read More ...