🐘 பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்

🌹 பிள்ளையார்…

  1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்!

  2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்!

  3. புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்!

Ganesha Chandanam
  1. வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.

  2. உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.

  3. வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்!

  4. விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.!

  5. சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.!

  6. சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.!

  7. வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

  8. வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

  9. சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

  10. பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்!

  11. கல் விநாயகர் - வெற்றி தருவார்!

  12. புற்றுமண் விநாயகர் - வியாபாரத்தை பெருக வைப்பார்!

  13. மண் விநாயகர் - உயர் பதவிகள் கொடுப்பார்!

🐘 கு பண்பரசு

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
01 Sep 2023 | Fri | 17:25:02 PM IST